search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvotriyur Vadivudaiamman Temple"

    • 47 அடி உயர மரத்தேரில் சந்திரசேகரசுவாமி திரிபுர சுந்தரியுடன் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    • ரூ. 2 லட்சம் செலவில் 60 மீட்டர் நீளம் 5.5 இஞ்ச் அகலமுள்ள வடக்கயிறு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு நடை பெறுகிறது. 47 அடி உயர மரத்தேரில் சந்திரசேகரசுவாமி திரிபுர சுந்தரியுடன் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் தேரோட்டத்தின் போது பயன்படுத்தும் தேங்காய் நாரிலான வடக்கயிறு 10ஆண்டுகள் ஆகிவிட்டதால் பழுதாகிவிட்டது. இதையடுத்து சமூக சேவகர் பக்தர் உத்தண்டராமன் ஏற்பாட்டில் நாகர்கோவிலில் இருந்து ரூ. 2 லட்சம் செலவில் 60 மீட்டர் நீளம் 5.5 இஞ்ச் அகலமுள்ள வடக்கயிறு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டு உள்ளது.


    இந்த புதிய வடக்கயிறு கோவில் வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இன்று மாலை 5 மணி யளவில் இதற்கு சிறப்புபூஜை செய்யப்பட்டு தேரில் பொறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தேரோட்ட விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் பாஸ்கரன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள். பக்தர்களுக்கான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    ×