என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thiruvannamalai collector"

    • மே மாதம் 15-ந்தேதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும்.
    • பிற மொழிகளில் பெயர் பலகைகள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும்.

    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி - கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும்.

    தமிழில் பெயர்ப்பலகை வைப்பவர்கள் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் குறிப்பிடப்படும் வார்த்தைகளை தமிழ் எழுத்தை விட சிறிய அளவில் வைக்க வேண்டும்.

    வருகின்ற மே மாதம் 15-ந்தேதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும். பிற மொழிகளில் பெயர் பலகைகள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு 168 பெண் குழந்தைகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ‘பெண் குழந்தைகள் காப்பாற்றுவோம், பெண் குழந்தைகள் கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ் ஆண், பெண் பாகுபாடு போட்டி நடைபெற்றது. இதில் மாணவர்கள் வீட்டு சமையல் வேலை செய்வது போன்றும், பெண்கள் விளையாட்டு, அரட்டை அடிப்பது என பொழுதை கழித்தும் உள்ளனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், செல்ல மகளுடன் ஒரு செல்பி புகைப்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு கேடயமும் வழங்கும் நிகழ்ச்சியும் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டீனா தா.டார்த்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டஅலுவலர் தமிழரசி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கலெக்டர் பேசியதாவது:–

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டுக்கு முன்பு 1000 ஆண் குழந்தைகளுக்கு 965 பெண் குழந்தைகள் என்று இருந்தது. தற்போது அந்த நிலை மாறி 2017–18–ம் ஆண்டு 1000 ஆண் குழந்தைகளுக்கு 882 பெண் குழந்தைகளாக குறைந்துள்ளது.

    ஆண்கள் மட்டும் தான் இருக்க வேண்டும். பெண்கள் அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை எங்கு ஆரம்பிக்கப்பட்டது என்றால் நமது கலாசாரம் தான் காரணம். ஒரு குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைகள் 2–ம் நிலையில் வைக்கப்படுகிறார்கள். பெண்களின் ஆற்றல் அனைத்தையும் சமமாக பார்க்கக்கூடிய ஊரில் நாம் இருக்கிறோம். ஆனால் நமது மாவட்டம் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் மாநில அளவில், தேசிய அளவில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். ஆண், பெண் பாகுபாடு அகற்றப்பட்டு சமமாக நடத்த வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு 168 பெண் குழந்தைகளின் திருமணம் தடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அரசு கலைக் கல்லூரி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட வெஜ் பிரியாணி, தயிர் பச்சடி, சாதம், ரசம், உருளைகிழங்கு பொறியல் போன்றவற்றை அவர்களுடன், கலெக்டர் சேர்ந்து சாப்பிட்டார்.
    இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தகராறில் திருவண்ணாமலை கலெக்டர் ஆபீஸ் முன்பு விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவண்ணாமலை:

    கலசபாக்கம் அருகே உள்ள வில்வாரணி கிராமத்தை சேர்ந்தவர் சங்கரன் (வயது 67). விவசாயி. இவரது மனைவி கோவிந்தம்மாள், மகன் கார்த்திகேயன் (32).

    இவர்கள் இன்று காலை திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வாசலில் நின்று உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் 3 பேரையும் தடுத்து நிறுத்தினர். அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தீப்பெட்டியை பிடுங்கினர்.

    அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தங்கள் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்து இருப்பதாகவும், இதுபற்றி கலசபாக்கம் போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தீக்குளிக்க முயன்றதாக அவர்கள் கூறினர்.

    3 பேரையும் கிழக்கு போலீஸ் நிலையயம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×