search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thirupampuram temple"

    27 நட்சத்திரங்கள் 12 ராசிகளில் அமர்ந்து அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப பலன்களை அளிக்கின்றன. நம்முடைய நட்சத்திரங்களுக்கு உரிய கோவில்களுக்கு சென்று வந்தால் நன்மைகள் வந்தடையும்.
    12 ராசிகளையும் நவகிரகங்கள் ஆட்சி செய்கின்றன. 27 நட்சத்திரங்கள் 12 ராசிகளில் அமர்ந்து அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப பலன்களை அளிக்கின்றன. நம்முடைய நட்சத்திரங்களுக்கு உரிய கோவில்களுக்கு சென்று வந்தால் நன்மைகள் வந்தடையும்.

    மேஷம் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில்
    பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாலங்காடு மகா காளி கோவில்
    கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாகை ஆதி சேஷன் கோவில்
    ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : நாக நாத சுவாமி, திருநாகேச்வரம்

    மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : துர்க்கா தேவி, கதிராமங்கலம்
    திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் திருகொள்ளிக்காடு
    புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆலங்குடி குருபகவான்
    பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் குச்சனூர்

    ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர், திருப்பரங்குன்றம்
    மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சிதம்பரம் தில்லைகாளி
    பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருமணஞ்சேரி ராகு பகவான்
    உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : மூவனுர் வாஞ்சியம்மன்

    ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை
    சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவாரூர் ராஜதுர்கை
    சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவானைக்காவல் சனீஸ்வரர்
    விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சோழவந்தான் சனீஸ்வரர்

    அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருவிடை மருதூர் மூகாம்பிகை
    கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : பல்லடம் அங்காள பரமேஷ்வரி
    உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : தென்முக கடவுள் , துர்காதேவி -தர்மபுரம்
    மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்

    பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : திருநாவலூர் தென்முக கடவுள்
    திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ராஜகாளி அம்மன் , தேதுபட்டி
    அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - கொடுமுடி,
    கரூர் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி , நாகராஜா - திருச்செங்கோடு

    பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : ஆதி சேஷன் சித்திரகுப்தர் - காஞ்சிபுரம்
    உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனி, தக்ஷினாமூர்த்தி - திருவையாறு
    ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் : சனீஸ்வரர் - ஓமாம்புலியூர்

    மதுபோதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பாம்புரம் தலத்தில் வழிபட முழுமையான பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
    ஒருவரது மது குடிக்கும் பழக்கம் அவரை மட்டுமல்ல, அவரது குடும்பத்தினரையும் அனைத்து வகையிலும் பாதிக்க செய்து விடும். தொடர்ந்து மது குடிப்பவர்கள் கடைசியில் அதற்கு அடிமையாகி உடல் நலம், மன நலம், வாழ்க்கை வளம் எல்லாவற்றையும் தொலைத்து நிர்க்கதியாக நிற்க வைத்து விடுகிறது.

    ராகு- கேது போன்ற சர்ப்ப கிரகங்கள் ஜாதகத்தில் சரியான இடத்தில் இல்லாமல் தோஷம் இருந்தால் இப்படி மதுவுக்கு அடிமையாகி அவர்கள் மனநிலையில் ஒரு தெளிவில்லாமல் இருப்பார்கள் என்று சொல்கிறார்கள். அதற்கு நாக தோஷ பரிகாரம் செய்ய வேண்டும் என்பது சிலரின் கூற்றாக உள்ளது.

    ராகு,கேது திருநாகேஸ்வரம், பெரும்பள்ளம் போன்ற தலங்களில் தனித்தனியாக இருக்கிறார்கள். காளகஸ்தி போன்ற புகழ்பெற்ற திருக்கோவில்களில், சிவபெருமானே ராகு-கேதுக்களாக வீற்றிருந்து பக்தர்களின் தோஷம் நீக்கி அருள்பாலிக்கிறார்.

    திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்றத் தலமாக விளங்கும் திருப்பாம்புரத்தில், ராகுவும்- கேதுவும் ஏக சரீரம் எனப்படும் ஓருடலாய் இணைந்து வீற்றிருப்பது சிறப்புக்குரியதாக உள்ளது.

    மேற்கு பார்த்த சன்னிதியில் இருந்து இறைவனை நெஞ்சில் நிறுத்தி வணங்கிய நிலையில் ராகு-கேது உள்ளனர். இருவரும் ஒருவராய் வீற்றிருப்பதால், மற்ற நாக பரிகார தலங்களைக் காட்டிலும், இந்தத் தலம் சிறப்புக்குரியதாக விளங்குகிறது.

    எனவே மதுபோதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தலத்தில் வழிபட முழுமையான பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிறப்பு பரிகாரம் இந்த ஆலயத்தில் செய்யப்படுகிறது. மது பாதிப்பு உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கால நேரமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை, இந்த ஆலயத்திற்கு எதிரே உள்ள சேஷ தீர்த்தத்தில் நீராட வேண்டும். பின்னர் கோவிலுக்குள் சென்று சுவாமியையும், அம்பாளையும் பிரார்த்தனை செய்து விட்டு, ராகு- கேதுவுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் பலர் மது மயக்கத்தில் இருந்து மாறுதல் அடைந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதற்கு நம்பிக்கைதான் முக்கியம் என்றும் சொல்கிறார்கள்.

    தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். மதுப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு முறை இந்தத் திருத்தலத்திற்கு சென்று வரலாமே. நம்பிக்கையோடு சென்று வாருங்கள். நல்லதே நடக்கும்.
    ஜாதகத்தில் எந்த தோஷங்கள் இருப்பவர்கள் திருப்பாம்புரம் கோவிலுக்கு வந்து தோஷ நிவர்த்தி பரிகாரங்களை செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசை நடந்தால், 7 வருட கேது தசை நடந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 2-ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 8-ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ராகு புத்தி கேது புத்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க திருப்பாம்புரம் தலத்திற்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி கோவில் அர்ச்சகர் வழி நடத்தும் வண்ணம் பரிகாரங்கள் செய்து தோஷ நவர்த்தி செய்து கொள்ளலாம்.

    கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் (வழி-பேரளம்) செல்லும் சாலையில் கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி 2 கிலோ மீட்டர் சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம். 
    ×