search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thirumullaivoyal masilamaneeswarar"

    திருமுல்லைவாயல் மாசிலாமணீஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் ஈசனை வணங்கினால் திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
    சென்னை ஆவடியை அடுத்த வட திருமுல்லைவாயலில் 1800 ஆண்டு பழமை வாய்ந்த மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்குள் நுழைந்தவுடன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார் மாசிலாமணீஸ்வரர். லிங்கத்தின் மேல் பகுதியில் வெட்டுப்பட்ட தடம் உள்ளது. கொடி போன்ற இடை கொண்டதால் இங்குள்ள அம்பாள் கொடியிடை நாயகி என அழைக்கப்படுகிறாள்.

    இங்குள்ள குளம் அக்னி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இந்த குளத்தில் நீராடி, இக்கோயில் வீற்றிருக்கும் மாசிலாமணீஸ்வரரை வணங்கினால் பாவங்கள் நீங்கும். இங்குள்ள நந்திக்கு பூஜை செய்த மாலையை அணிந்து கொண்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும். திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அம்மனை குளிர்விக்கும் வகையில் தினமும் அம்மனுக்கு சந்தன காப்பு செய்யப்படுகிறது. 
    ×