search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thirumohur kalamega perumal temple"

    திருமோகூரில் காளமேக பெருமாள் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வாரை வழிபாடு செய்தால் பதவி உயர்வு, தம்பதி ஒற்றுமை, திருமணத் தடை போன்ற பிரச்சனைகள் படிப்படியாக தீரும் என்பது ஐதீகம்.
    மதுரையில் மேலூர் செல்லும் வழியில் உள்ளது ஒத்தக்கடை இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள திருமோகூரில் காளமேக பெருமாள் கோவில் உள்ளது.

    இந்த தலத்தில் பெருமாளின் திருநாமம்- ஸ்ரீகாளமேகப் பெருமாள். என்றாலும் சேத்திர ரட்சகர் என்று போற்றப்படுகிற ஸ்ரீசக்கரத்தாழ்வார் சந்நிதியில் எப்போதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    16 திருக்கரங்கள், அவற்றில் ஆயுதங்கள் ஏந்தி காணப்பட்டாலும் தன்னை நாடி வரும் அன்பர்களுக்கு கருணையுடன் வரங்களை வாரித் தருகிறார் ஸ்ரீசக்கரத்தாழ்வார். இவர் திருக்கரங்களில் உள்ள சக்கரம். துர்குணம் கொண்டவர்களுக்கு ஆயுதமாகவும், நற்சிந்தனையாளர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் அட்சயம் பாத்திரமாகவும் அமைந்திருப்பதாக ஐதீகம்.

    இங்கேயுள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வாரின் விக்கிரகத் திருமேனியில் 48 அதிதேவதைகளும் 154 மந்திரங்களும் அமைந்திருக்கிறது. தொடர்ந்து 11 சனிக்கிழமைகளில் திருமோகூர் திருத்தலத்துக்கு வந்து ஸ்ரீசக்கரத்தாழ்வாரைத் தரிசித்துப் பிரார்த்தித்தால் திருமணத் தடை நீங்கும். நினைத்த காரியம் நிறைவேறும். வீடு, மனை வாங்குகிற யோகம் கிட்டும். எதிரிகள் தொல்லை ஒழியும் என்று தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை சொல்லிச் சிலிர்க்கிறார்கள் பக்தர்கள்.

    ஆனி சித்திரை நட்சத்திர நாளில் ஸ்ரீசுதர்சன ஜெயந்தி. அன்று இங்கு பிரமாண்டமாக நடைபெறும் ஸ்ரீதர்சன ஹோமத்தில் கலந்து கொண்டால். ஸ்ரீசக்கரத் தாழ்வாருக்கு நடைபெறும் பூஜைகளைத் தரிசித்தால் சகல யோகங்களும் கைகூடும் என்பது நம்பிக்கை. புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் படைத்து அவரை வணங்கினால் தம்பதி ஒற்றுமை மேலோங்கும். பதவி உயர்வு கைகூடும். தொடர்ந்து 12 சனிக்கிழமைகள் நெய் தீபமேற்றி, ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வணங்கினால் எல்லா வளமும் பெறலாம்.
    ×