என் மலர்
நீங்கள் தேடியது "Thirumhannam ceremony"
- புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி கோவிலில் ஆனி திருமஞ்சனம் விழா நடைபெற்றது
- நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு பால், திருமஞ்சனம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அருள்மிகு வேதநாயகி அம்பிகை உடனுறை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் ஆனி திருமஞ்சனம் விழா சிறப்புடன் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஆலயத்தின் அலங்கார மண்டபத்தில் உற்சவர் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு பால், திருமஞ்சனம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. ஆலயத்தில் வேதநாயகி அம்பிகை சாந்தநாதசுவாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இவ்விழாவில் உபயதாரர் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், குருக்கள் சிறப்புடன் செய்தனர். புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதி சுந்தரம் அடிகளார் இல்லத்தில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உற்சவர் நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் நடராஜ பெருமான், சிவகாமி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதைத்தொடர்ந்து திருமுறைகள், சிவபுராணம், நடராஜப் பத்து முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. அனைவருக்கும் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர். நடராஜ பெருமானுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆறு நாட்கள் மட்டுமே சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் முக்கிய விசேஷங்கள் ஆகும்.






