என் மலர்

  நீங்கள் தேடியது "thirumangalam police investigation"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமங்கலம் அருகே மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  பேரையூர்:

  திருமங்கலம் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் மதிவாணன். இவரது மகள் செல்விமீனா (வயது 26). இவருக்கும், பரவை எஸ்.எம்.பி. நகரைச் சேர்ந்த சந்திரன் மகன் பாண்டி முருகன் (34) என்பவருக்கும் 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

  சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக செல்விமீனா தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இந்த நிலையில் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தியபின்கடந்த ஆண்டு மீண்டும் சேர்ந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது.

  இந்த நிலையில் மனைவியை பிரிந்திருந்த காலத்தில் பாண்டிமுருகன் விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் குருலட்சுமி (21) என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது.

  இதை அறிந்த செல்வி மீனா திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த பாண்டிமுருகனை கைது செய்தனர். அவரது தாய் வசந்தி, குருலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமங்கலத்தில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  பேரையூர்:

  திருமங்கலம் ரோஜா தோட்டத்தைச் சேர்ந்தவர் ரெஜினா. திருமங்கலம் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

  பிரபாகரன் (20) மதுரை அண்ணாநகர் தனியார் பார்மசி கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலையில் பிரபாகரன் கல்லூரிக்கு சென்று விட்டார்.

  தாயார் ரெஜினாவும் பள்ளிக்கு சென்று விட்டார். ரெஜினா மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் அறையில் பிரபாகரன் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  பிரபாகரன் தற்கொலை செய்தது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆலம்பட்டி பஸ் நிறுத்தத்தில் கணவருடன் நின்ற பெண்ணிடம் 2 பவுன் செயினை வழிப்பறி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
  மதுரை:

  மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள பத்தன்யாபுரம், சாமிக்கண்ணு தெருவைச் சேர்ந்தவர் முத்து (வயது 60). இவர் நேற்று இரவு மனைவியுடன் வெளியூர் செல்வதற்காக ஆலம்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

  அப்போது 3 வாலிபர்கள் சுற்றி வளைத்து முத்து மனைவி கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச்செயினை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர். இதில் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கதறிய அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

  இது தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசில் முத்து புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் பாண்டியராஜ் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை தேடி வருகிறார். #Tamilnews
  ×