என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thieves hand in hand"

    • மெயின் ரோட்டில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • சங்கிலியை பறிக்கும்போது ராணி திருடன் திருடன் என கூச்சலிட்டார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே மொளச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ராணி (வயது 60) இவரது கணவர் சாம்பசிவம் ஒரு வருடங்களுக்கு முன்பு இறந்தார். இந்நிலையில் ராணி தனியாக புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் செல்லும் 4 வழி சாலை மொளச்சூர் மெயின் ரோட்டில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு 7 மணி அளவில் டீ கடைக்கு 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களில் ஒருவர் மட்டும் டீக்கடையில் டீ குடித்தார்.

    மற்றொருவர் மோட்டார் சைக்கிளில் சாலையிலே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர் ராணியின் கழுத்தில் இருந்த சுமார் 2 லட்சம் மதிப்பிலான 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றார். சங்கிலியை பறிக்கும்போது ராணி திருடன் திருடன் என கூச்சலிட்டார். ஆனால் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் யாருமே இல்லாததால் செயின் பறிப்பு வாலிபர்களுக்கு சாதகமாக அமைந்தது. மேலும் இதுகுறித்து ராணி கிளியனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி வழக்கு பதிவு செய்து மூதாட்டி இடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×