என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "They handed it over to the police"

    • குடி போதையில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த பஷிராபாத் பகுதியை சேர்ந்தவர் ஆசிம் (வயது 28). இவர் குடி போதையில் அதே பகுதியில் ஒரு வீட்டில் நள்ளிரவில் புகுந்து 38 வயது பெண்ணை சரமாரியாக தாக்கி உள்ளார்.

    இந்நிலையில் அந்த பெண் கூச்சலிடவே அப்பகுதி மக்கள் அந்த இளைஞரை பிடித்து சரமாரியாக தாக்கினார்.

    மேலும் ஆசீமை வாணியம்பாடி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

    இதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ஆசீமை கைது செய்தனர்.

    ×