என் மலர்
நீங்கள் தேடியது "They are struggling to exchange Rs 10 coins."
- செல்லாது என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி
- நோட்டீஸ் ஒட்டி வாங்குகின்றனர்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி வலுப்பெற்றுள்ள காரணத்தால் 10 ரூபாய் நாணய த்தை வைத்துள்ள வணிகர்களும், பொ துமக்களும் வெகுவாக பா திக்க ப்பட்டு வருகிறார்கள்.
10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் செல்லத்தக்கவையே என்று ரிசர்வ் வங்கி பலமுறை விளக்கம் அளித்துவிட்டது. ஆனால் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி வேலூர் மாவட்டத்தில் இன்னமும் நீடித்துக்கொண்டே இருக்கிறது.
பொதுமக்கள் தன்னிடம் உள்ள 10 ரூபாய் நாணயங்களை மாற்ற முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க வேலூர் மாநகரப் பகுதியில் தற்போது 10 ரூபாய் நாணயங்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒரு டிபன் கடையில் இது பற்றி அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அதில் இங்கு 10 ரூபாய் நாணயங்கள் பரிவர்த்தனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வேலூரில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் 10 ரூபாய் நாணயங்களை வைத்துள்ள பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.இதே போல அனைத்து வணிக நிறுவனங்கள், பஸ்களிலும் 10 ரூபாய் நாணயங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






