என் மலர்
நீங்கள் தேடியது "They are looking for the brewing gang"
- மது விலக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்
- மூலப்பொருட்களை தீயிட்டு கொளுத்தினர்
ஆலங்காயம்:
வாணியம்பாடி அருகே உள்ள தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மாதகடப்பா மலையில் தேவராஜ்புரம், கொரிபள்ளம், தரைகாடு உள்ளிட்ட மலை பகுதிகளில் திம்மாம்பெட்டை மது விலக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கொரிபள்ளம் மலைபகுதியில் கள்ள சாராயம் காய்ச்ச தயாராக வைத்திருந்த 2000 லிட்டர் கள்ள சாராய ஊறல்களை கண்டறிந்து அங்கேயே ஊற்றி அழித்தனர்.
மேலும் கள்ள சாராயம் காய்ச்சுவதற்க்காக வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்களையும் தீயிட்டு கொளுத்தினர். மேலும் போலீசார் வருவதை கண்டு தப்பி ஓடிய கள்ள சாராயம் காய்ச்சும் கும்பலை தேடி வருகின்றனர்.






