என் மலர்
நீங்கள் தேடியது "theft men electrical shock"
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மது வாங்குவதற்காக டிரான்ஸ்பார்மரில் ஏறி காப்பர் கம்பியை திருட முயன்றவர் மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளார்.
மயிலாடுதுறை எடத் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் மீது பல திருட்டு வழக்குகள் உள்ளன. இவர் மது அடிமையாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதுகுடிக்க பணம் தேவைபட்டதால் ரமேஷ் மயிலாடுதுறை ஐயாறப்பர் தெற்கு வீதியில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் மீது ஏறி காப்பர் கம்பியை திருட முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்தக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது டிரான்ஸ்பார்மருக்கு அருகில் ரமேஷ் வெட்டிய காப்பர் கம்பிகள் கிடந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் ரமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். #Electricalshock






