என் மலர்
நீங்கள் தேடியது "Theerthakuda procession"
பெரும்பாலை அருகே மாரியம்மன்,விநாயகர் கோவில் விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.
பெரும்பாலை.
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் அருகே புதூர் சோளப்பாடி கிராமத்தில் சக்தி வாய்ந்த ஸ்ரீ சக்தி மாரியம்மன் விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 60 வருடங்களுக்கு மேல் பழமையானது.
இக்கோயிலில் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை அடுத்து நாளை கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் அதற்கான விழா ஏற்பாடுகளை ஊர் மக்கள் ஒன்றிணைந்து செய்திருந்தனர்.
விழா நிகழ்வின் தொடக்க நிகழ்வாக நேற்று கோவிலில் நடைபெறக்கூடிய யாகசாலை பூஜைகளுக்காக புனிதநீர் கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது. இதற்காக கோவில் அமைந்துள்ள பகுதியி லிருந்து காவிரி ஆற்றுக்கு சென்று அங்கிருந்து ஊர் மக்கள் அனைவரும் காவிரி ஆற்றின் புனித நீரை யாகசாலையில் வைப்பதற்காக அங்கிருந்து ஊர் மக்கள் அனைவரும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தீர்த்த குடங்களில் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
தீர்த்தக் குட ஊர்வலத்தின் போது குதிரையுடன் கூடிய ஊர்வலமானது ஊர்மக்கள் தீர்த்தக்குடம், முளைப்பாலிகை மற்றும் கோவில் கலசத்துடன் வெகுவிமர்சையாக கோவிலுக்கு பம்பை மற்றும் மங்கள வாத்தியங்களுடன் ஏரியூர் பகுதியிலிருந்து கோயில் அமைந்துள்ள புதூர் சோளபாடி வரை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் பெண்கள் என அனைவரும் பக்தியுடன் தீர்த்துக் குடத்தை ஊர்வல மாக கொண்டு வந்தனர்.
இந்த கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர் மகாராஜன், முத்து, முருகேசன், கோல்காரர் கணேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செய்திருந்தனர்.






