என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The tractor overturned and killed the youth"

    டிராக்டர் கவிழ்ந்து கார்த்திக் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கிழக்கத்தியான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் மாது . இவரது மகன் கார்த்திக் (வயது 19). இவர்களுக்கு சொந்தமாக வயல் உள்ளது. 
    இந்நிலையில் கார்த்திக் தனது நண்பரின் டிராக்டரை இரவல் வாங்கி வந்துள்ளார். 

    அந்த டிராக்டரில் ஏறி தானே வயலில் உழவு  செய்துள்ளார். உழவு  முடிந்த பிறகு வரப்பு வழியாக டிராக்டரை வயலில் இருந்து மேலே ஏற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்து. 

    இதில் டிராக்டரை ஒட்டி வந்த கார்த்திக் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக செத்தார். இந்த விபத்து குறித்து பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×