என் மலர்
நீங்கள் தேடியது "THE ROOF OF THE PIECE COLLAPSED IN THE RAIN"
- பெரம்பலூரில் பெய்த மழைக்கு ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
- வீட்டில் உள்ள பொருட்கள் சேதமடைந்தன
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் மழை பெய்தது. ஆனால் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் இடி-மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது.
மழை பெய்யும் போது சூறைக்காற்றும் வீசியது. இந்த மழைக்கு பெரம்பலூர் தாலுகா, கீழக்கணவாய் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், வீட்டில் உள்ள பொருட்கள் சேதமடைந்தன. ராமச்சந்திரன் குடும்பத்தினர் மழை பெய்யும் போது சுதாரித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதால், அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் அவர்கள் அரசின் நிவாரணம் கேட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






