search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the roof"

    • பள்ளி கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    சிவகங்கை 

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வேங்கைபட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 142 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி வளாகத்தில் உள்ள 3 கட்டிங்களில் ஒன்று பழுதடைந்துள்ளது. அங்கு யாரும் உள்ளே செல்லாதபடி எச்ச ரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் அருகே உள்ள மற்ற 2 கட்டிடங்களிலும் 8-ம் வகுப்பு மற்றும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காலண்டு விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் தொடங்கிய நிலையில் பள்ளியை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர் அந்த கட்டிட அறைகளை திறந்தபோது ஆசிரியர் இருக்கைக்கு மேலே இருந்த மேற்கூரை இடிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சிவராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண ராஜூ ஆகி யோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இதுகுறித்து அந்தப்ப குதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், பள்ளி கட்டிடம் கட்டி சில ஆண்டுகள் தான் ஆகிறது. ஆனால் அதற்குள் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. தரமற்ற முறையில் கட்டிடங்களை கட்டியுள்ளனர். இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. தரமில்லாமல் பள்ளி கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம் போன்ற அனைத்தும் கட்டிடங்களும் உள்ளது.

    இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதை பார்க்கும் போது பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப அச்சமாக உள்ளது. எனவே வரும் காலங்களில் தரமான கட்டிடங்களை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தனர். பள்ளி கட்டிடத்தின் நிலைமை மோசமாக இருப்பதால் 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வர தயக்கம் காட்டி வருகின்றனர்.

    ×