என் மலர்
நீங்கள் தேடியது "The police raided the house where the burglary took place"
- 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை
- 50 பவுன் நகை அபேஸ்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த தாயப்பன்நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40) ஸ்டூடியோ உரிமையாளர். இவரது மனைவி ரம்யா (32) . இவர் திருப்பத்தூர் கோர்ட்டில் டைப்பிஸ்டாக உள்ளார்.
இவர்கள் கடந்த 7-ந் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு பணிக்கு சென்றனர். அன்று மாலை பணிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பினர்.
அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 50 பவுன் நகைகள் மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து கந்திலி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மேலும் மர்ம கும்பலை பிடிக்க எஸ்பி ஆல்பர்ட்ஜான் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்க ப்பட்டது.
அதன் பேரில் நேற்று தனிப்படை போலீசார் திருட்டு நடந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள சமையலறை யில் 47 பவுன் நகைகள் இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து ரம்யாவிடம் விசாரித்தபோது, நாங்கள் திருமணத்திற்கு சென்று விட்டு வந்து இந்த நகை களை சமையலறையில் வைத்திருந்ததாக கூறினார். ஆனால் பீரோவில் வைத்திருந்த நகைகள், பணம் திருட்டுபோனதாக தெரிவித்தார்.
இதையடுத்து நகை திருடியவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக் களை ஆய்வு செய்தனர்.
மேலும் ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டிலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.






