என் மலர்
நீங்கள் தேடியது "The man who tried to rape the girl was arrested"
- திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
- சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா முடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 37), கூலி தொழிலாளி.
இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி 16 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார்.
அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தனர்.
இதைகண்ட ராஜா சிறுமியை அங்கேயே விட்டு, விட்டு தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போளூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போச்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார்.
இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி நேற்று தீர்ப்பு கூறினார்.
அதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ராஜாவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்தார். இதையடுத்து ராஜாவை போலீசார் வேலூர் சிறையில் அடைந்தனர்.






