என் மலர்

  நீங்கள் தேடியது "The machine informs that there is no money"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விவசாயி பாலசுப்பிரமணி என்பவர் பணம் எடுப்பதற்காக வந்தார்.
  • பணம் எடுத்ததற்கான குறுஞ்செய்தி

  பரமத்தி வேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்-ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டி.எம்மில் பரமத்தி வேலூர் அடுத்த இருக்கூர் காக்காயம் தோட்டத்தை சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணி என்பவர் பணம் எடுப்பதற்காக வந்தார்.

  பின்னர் ஏ.டி.எம். மெஷினில் அட்டையை உள்ளே நுழைத்து பணம் எடுப்பதற்காக ரகசிய எண்ணை அழுத்தி செயல்பாட்டிற்காக காத்துள்ளார். அப்போது பணம் இல்லை என்று எந்திரத்தில் தகவல் வந்தது. இதையடுத்து ஏ.டி.எம். கார்டை வெளியே எடுத்து உள்ளார்.

  அப்போது பாலசுப்பிரமணியத்திற்கு பின்னால் நின்று கொண்டு இருந்த மர்ம நபர் அந்த மிஷினில் பணம் இல்லை. வேறு மிஷினில் பணம் எடுத்து தருகிறேன் என அவரிடம் இருந்த ஏடிஎம் கார்டை கேட்டு வாங்கி உள்ளார். பாலசுப்ரமணியம் நானே எடுத்துக் கொள்கிறேன் கார்டை கொடுத்து விடு என்று கூறி விட்டு கார்டை வாங்கி உள்ளார்.உடனே அந்த நபர் போலி கார்டை கொடுத்து விட்டு வேகமாக வெளியே வந்து இருசக்கர வாகனத்த்தில் ஏறி சென்றார். அதேவேளையில் பாலசுப்பிரமணியம் செல்போனுக்கு பணம் எடுத்ததற்கான குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலசுப்ரமணியம் தனது மகனிடம் தெரிவித்து ஏ.டி.எம். அட்டையை முடக்கம் செய்துள்ளார்.

  இதைத்தொடர்ந்து பாலசுப்ரமணியம் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றபோது விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்பதால் புகார் மனுவை வாங்க மறுத்த போலீசார் திருப்பி அனுப்பி உள்ளனர்.மேலும் பாலசுப்பிரமணியன் கூறுகையில் நான் விவசாயம் செய்து சிறுக சிறுக சேமித்து வைத்த தொகையை மர்ம நபர் நூதன முறையில் என்னை நொடி பொழுதில் ஏமாற்றி கொள்ளையடித்துச் சென்றது மன வேதனை அடைந்து கவலையாக உள்ளேன் என்று கண்கலங்கியது பார்க்க பரிதாபமாக இருந்தது. 

  ×