என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The Lorry entered the crowd"

    • புறம்போக்கு நிலங்களில் செம்மண் அள்ளி விற்பனை செய்யப்பட்டு வரும் லாரிகள் அதிவேகமாக வருவதால் மாணவ-மாணவிகள், முதியவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • செம்பட்டியில் உள்ள யூனியன் அலுவலகம் முன்பு திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது.

    செம்பட்டி:

    செம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய், குளம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் செம்மண் அள்ளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பயன்படுத்தப்படும் லாரிகள் அதிவேகமாக வருவதால் மாணவ-மாணவிகள், முதியவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    செம்பட்டி அருகே உள்ள பிரவான்பட்டி பகுதியில் செம்மண் ஏற்றிக் கொண்டு வத்தலக்குண்டு சாலையில் அதிவேகமாக டிப்பர் லாரி ஒன்று வந்தது. செம்பட்டியில் உள்ள யூனியன் அலுவலகம் முன்பு திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது. சாலையோரம் நின்றிருந்த மக்கள் கூட்டத்தில் புகுந்ததால் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இந்த விபத்தில் பைக்கில் வந்த அடியனூத்தைச் சேர்ந்த சக்திவேல் (32), செம்பட்டியைச் சேர்ந்த அற்புதம் (50) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பொதுமக்கள் கூடியதால் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

    லாரிகள் அதி வேகமாக செல்வதால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×