என் மலர்
நீங்கள் தேடியது "The incident created a stir in the area"
- குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் காயத்ரி (வயது 32).வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வந்தார்.அதே ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் தூத்துக்குடியை சேர்ந்த டாக்டர் செல்வகுமார் என்பவரை 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் வேலூர் தொரப்பாடி காந்தி நகரில் வசித்து வந்தனர்.
டாக்டர் தம்பதியான இவர்களுக்கு குழந்தை இல்லை. காயத்ரி வீட்டில் இருக்கும்போது செல்வகுமாரும், அவர் வீட்டில் இருக்கும் போது காயத்திரியும் பணிக்கு சென்று வந்தனர்.
இதனால் இருவரும் வீட்டில் ஒன்றாக இருக்க முடியவில்லை. இது குறித்து காயத்ரி அடிக்கடி செல்வகுமாரிடம் உருக்கமாக பேசியுள்ளார்.
இந்த நிலையில் செல்வகுமார் டெல்லி சென்றிருந்தார். அங்கிருந்து போனில் அவரது மனைவியிடம் பேசியுள்ளார். பின்னர் மாலையில் போன் செய்தபோது காயத்ரி போனை எடுக்கவில்லை. டெல்லியில் இருந்து நேற்று இரவு செல்வகுமார் வீடு திரும்பினார்.
அவர் வீட்டில் வந்து பார்த்தபோது அங்குள்ள அறையில் காயத்ரி தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதனைக் கண்டு அவர் கதறி அழுதார். இது குறித்து தகவலறிந்த பாகாயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கணவருடன் சேர்ந்து இருக்க முடியவில்லை, குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் காயத்ரி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






