என் மலர்
நீங்கள் தேடியது "The husband who tried to take the wife"
- தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள வளர்புரம் பகுதியை சேர்ந்தவர் ராமராஜன் (வயது 35). விவசாயி. இவரது மனைவி மஞ்சுளா (30). இவர்களுக்கு காவியா ஸ்ரீ (5) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மஞ்சுளாவின் தாயார் கோவிந்தம்மாள் இறந்து விட்டார்.
இதனால் தாயார் வீட்டுக்கு மஞ்சுளா சென்றார். சில சடங்குகள் செய்ய வேண்டி இருந்ததால் மஞ்சுளா கடந்த 1 மாதமாக அங்கேயே இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 23-ந் தேதி மஞ்சுளா தனது கணவர் வீடான வளர்புரத்திற்கு வந்தார். அப்போது ராமராஜன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த மஞ்சுளா வீட்டில் இருந்த மண் எண்ணெய்யை உடம்பில் ஊற்றிக் கொண்டார். எடுத்து போலீஸ் அப்போது ராமராஜன் நீ என்ன சாவது நானே கொளுத்தி விடுகிறேன் என்று தீக்குச்சியை பற்ற வைத்து மஞ்சுளா மீது போட்டதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த மஞ்சுளாவை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






