என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The driver died in the accident"

    • கட்டுப்பாட்டை இழந்து தரைபாலத்தில் விபத்து
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே கரும்பூர் பகு தியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 26), வேன் டிரைவர். இவர் நேற்று முன்தினம் நள் ளிரவு ஆம்பூர் அருகே பாங்கி ஷாப் சுடுகாடு அருகே தரைப் பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கட்டுப்பாட்டை இழந்து பைக் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உமராபாத் போலீசார் சந்தோஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×