search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Textile Trading"

    • பொதுமக்கள் அதிகளவில் ஜவுளி மற்றும் இதர பொருட்கள் வாங்குவதற்காக சேலம் மாநகருக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
    • பெரிய கடை முதல் சிறு, சிறு ஜவுளிக்கடைகளில் வியாபாரம்களை கட்டுகின்றன.

    சேலம்:

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. சேலம் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் ஜவுளி மற்றும் இதர பொருட்கள் வாங்குவதற்காக சேலம் மாநகருக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சாலையோரம் தற்காலிக கடைகளும் அதிகளவில் முளைத்துள்ளன. இங்கு சேலை, சுடிதார், குழந்தைகளுக்கு தேவை யான துணிகள், பேண்ட், சட்டை, ஜீன்ஸ் போன்ற ஜவுளி வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கின்றன.

    பெரிய கடை முதல் சிறு, சிறு ஜவுளிக்கடைகளில் வியாபாரம் களை கட்டுகின்றன. இதேபோல் சேலம் மாநகரில் நேற்று கடைவீதியில் தீபாவளி வியாபாரம் படுஜோராக நடந்தது.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஆண்களும், பெண்களும் தங்களது குடும்பத்தினருடன் ஜவுளி எடுக்க சேலம் பழைய பஸ் நிலையம், கடைவீதி மற்றும் அதனை சுற்றியுள்ள ஜவுளி கடைகளில் குவிந்தனர். சேலம் புதிய பஸ்நிலையம், 5 ரோடு, அழகாபுரம் பகுதியிலும் அதிக ளவில் ஜவுளிக்கடை செயல்பட்டு வருவதால் அங்குள்ள கடைகளிலும் வியாபாரம் மும்முரமாக நடந்தது.

    இங்கு பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படு வதால் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 10 -க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை உஷார் படுத்தி வருகின்றனர்.

    இதுதவிர கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் போலீசார் தங்களது உடையில் சிறிய கேமிராவை பொருத்தி அதன்மூலம் திருடர்களை கண்காணிக்கின்றனர். தீபாவளி பாதுகாப்பு பணியில் 1,200 போலீசாரும், ஊர்க்காவல் படையினர் 150 பேரும் என மொத்தம் 1,350 பேர் ஈடுபட்டு உள்ளனர். போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    தீபாவளியையொட்டி பொதுமக்கள் இன்னும் அதிக அளவில் திரள வாய்ப்பு உள்ளதால் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீஸ் துணை கமிஷனர்கள் லாவன்யா, மாடசாமி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    ×