என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Terrible conflict between prisoners"

    • நேற்று இரவு இவருக்கும், மதுரையைச் சேர்ந்த மற்றொரு கைதிக்கும் எங்கே தூங்குவது என்ற பிரச்சினையில் வாக்கு வாதம் ஏற்பட்டது.
    • பின்னர் இது கைகலப்பாக மாறி இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் தாலுகா அலுவலக சாலையில் கிளைச் சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு ள்ளனர்.

    வடமதுரை திடீர் நகரைச் சேர்ந்த முருகன் மகன் வீரபாபு என்ற குட்டி (வயது 35) என்பவர் பைக் திருட்டு வழக்கில் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நேற்று இரவு இவருக்கும், மதுரையைச் சேர்ந்த மற்றொரு கைதிக்கும் எங்கே தூங்குவது என்ற பிரச்சினையில் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    பின்னர் இது கைகல ப்பாக மாறி இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். வீர பாபுவை மற்றொரு தரப்பினர் கடுமையாக தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து சிறைக்காவ லர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே வீரபாபு சிறையில் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடை ந்தனர். இது குறித்து நகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கைதிகளிடம் விசாரணை நடத்தி வரு கின்றனர். இச்சம்பவம் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×