என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TEMPORARY STOPPAGE"

    • குளித்தலை பகுதிகளில் நடைபெற்ற ஆக்கிரமிப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது
    • வியபாரிகளின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை

    கரூர்:

    வியாபாரிகள் கோரிக்கையை ஏற்று குளித்தலை நகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    கரூர் மாவட்டம் குளித்தலை தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர்கள், குளித்தலையில் வியாபாரிகள் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அவற்றை உடனே அகற்ற வேண்டுமென குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவியிடம் கடந்த வாரம் புகார் அளித்தனர். இதையடுத்து குளித் தலை நகராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி ஆணையர் சுப்புராம்க்கு கோட்டாட்சியர் புஷ்பாதேவி உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து குளித்தலை நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள பஜனை மடம் பகுதியில் நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குளித்தலையைச் சேர்ந்த வியாபாரிகள், திமுக தலைமை அலுவலக பேச்சாளர் சலாவுதீன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து குளித்தலை நகராட்சி ஆணையர் சுப்புராம் கடை உரிமையாளர்களை அழைத்து பேசினார். அப்போது பேசிய கடை உரிமையாளர்கள்,

    ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் வியாபாரிகளுக்கு எந்தவித ஆட்சேபணையும் கிடையாது. ஒவ்வொரு முறை ஆக்கிரமிப்பு அகற்றும் போதும் முக்கிய கடைவீதி, பேருந்து நிலையம் பகு தியில் மட்டும் ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது. 1வது வார்டில் இருந்து 24வது வார்டு வரை அனைத்துப் பகுதியும் சரிசமமாக ஆக்கிரமிப்பு அகற்றினால் மட்டுமே வியாபாரிகள் ஒத்துழைப்பு தருவார்கள்.

    தற்பொழுது பருவமழை காலம் என்பதால் வியாபாரிகளின் கடை முன்பு 3 அடி நீள த்திற்கு பந்தல் அமைத்துக் கொள்ளவும், அதற்கு நகராட்சிக்கு உரிய வாடகை செலுத்தவும் வியாபாரிகள் தயாராக உள்ளனர் என்று கூறினர். இதனை எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்கும்படி ஆணையர் சுப்புராம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

    ×