என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple Festival Ratinam"

    • ஏலத்தில் மொத்தம் 30 பேர் கலந்து கொண்டனர்
    • ராட்டினம் ஏலம் ரூ.1 கோடியே 50 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

    தேனி:

    தேனி அருகே உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 18-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி மே 9-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்காக எந்திர ராட்டினம் நடத்துதல் உள்பட கண்மலர், உணவு கூடம் ஆகியவைகளுக்கான மறு ஏலம் நடைபெற்றது.

    இந்த ஏலத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் பாரதி தலைமை தாங்கினார். கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து, மேலாளர் பாலசுப்பிரமணியம், கணக்கர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏலத்தில் மொத்தம் 30 பேர் கலந்து கொண்டனர். இதில் ராட்டினம் ஏலம் ரூ.1 கோடியே 96 லட்சத்திற்கு கிருஷ்ணன் என்பவர் ஒப்பந்தப்புள்ளி மூலம் எடுத்துள்ளார். அதுபோல கண்மலர் ஏலத்தை ரூ.4 லட்சத்திற்கு ஏலத்தின் மூலம் பிரபு என்பவர் எடுத்துள்ளார்.

    இவற்றில் ராட்டினம் ஏலம் எடுப்பதற்கான ஏலத்தொகை கடந்த ஆண்டு ரூ.1.36 கோடியே 700-க்கு போனது. ஆனால் இந்த ஆண்டு ராட்டினம் ஏலம் ரூ.1 கோடியே 50 லட்சம் என இந்து சமய அறநிலைய த்துறை சார்பில் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டை விட ரூ.59 லட்சத்து 99 ஆயிரத்து 300 கூடுதலாக ரூ.1 கோடியே 96 லட்சத்திற்கு ஏலம் போனது குறிப்பிட த்தக்கது.

    ×