என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teachers mouth meeting"

    • அரசு நலத்திட்டங்களும் சலுகைகளும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தல்.
    • பணப்பலன்கள் பெற ஆணை வழங்கிட வேண்டும்.

    வேலூர்:

    தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் வேலூர் கிருஷ்ணசாமி மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் மேல்நிலை விடைத்தாள் திருத்தும் முகாம் முன்பு வாயிற்கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு எஸ்.ராஜேஸ்கண்ணா தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.அஜீஸ்குமார் வரவேற்று பேசினார். மாநில தலைமையிட செயலாளர் இ.இராவணன், மாநில செயதி தொடர்பாளர் எம்.மகேந்திரன் ஆகியோர் பேசினர்.

    மாவட்ட பொருளாளர் ஆர்.ஜெயகுமார் மாவட்ட இணை செயலாளர் டி.ஜெயபிரகாஷ், மாவட்ட தலைமையிட செயலாளர் வி.திருகுமரன், மகளிர்அணி செயலாளர் கே.ஜி.தேவி நிதிஉதவி பள்ளி செயலாளர் பி.செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

    புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டதினை கைவிட்டு பழைய ஓய்வூதி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

    ஆசிரியர்களுக்கு பணிப்பாதுக்காப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். 2009-க்கு பிறகு பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு சரண் போன்ற பணப்பலன்கள் பெற ஆணை வழங்கிட வேண்டும்.

    புதிய கல்வி கொள்கையை ரத்து செய்திட வேண்டும், அரசு பள்ளியில் படிக்கும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வழங்குவது போல் அனைத்து அரசு நலத்திட்டங்களும் சலுகைகளும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும், ஆசிரியர் மாணவர் நலன் கருதி கற்பித்தல் கற்றல் பணியை மட்டுமே ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும், 2004-2006 தொகுப்பூதிய பணிக்காலத்தினை பணிவரன் முறைப்படுத்தி சமவேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.

    முடிவில் மாவட்ட அமைப்புச்செயலாளர் டி.மலர்விழி நன்றி கூறினார்.

    ×