என் மலர்
நீங்கள் தேடியது "Tamil Peoples"
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுத்ததால் தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். #SterliteProtest #Rahul
புதுடெல்லி:

இந்நிலையில், போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், ஏனென்றால் அவர்கள் ஆர் எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது. தமிழ் சகோதர சகோதரிகளே, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’ என ராகுல் டுவிட் செய்துள்ளார். #SterliteProtest #Rahul
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இந்த தாக்குதல்களில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.