search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamil language subject"

    • இந்த உத்தரவு நடப்பு கல்வியாண்டிலேயே நடைமுறைக்கு வர வேண்டும்.
    • அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நடைமுறையை பின்பற்ற நடவடிக்கை.

    தமிழக உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் பிகாம், பிபிஏ, பிசிஏ பாடப்பிரிவுகளுக்கு இரண்டாம் ஆண்டில் தமிழ் மொழி பாடத்திட்ட தேர்வு இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நடைமுறையை பின்பற்றக்கூடிய வகையில் இந்த மூன்று பாடப்பிரிவுகளிலும் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் பாடமும் இடம்பெற வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த பாடப்பிரிவுகளில் முதலாமாண்டில் தமிழ் பாடத்தேர்வு இருக்கிறது. இரண்டாம் ஆண்டில் கிடையாது.

    தற்போது இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ் பாடத்தேர்வு இடம்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறையானது நடப்பு கல்வியாண்டிலேயே அதாவது அடுத்த செமஸ்டர் தேர்வு எப்போது நடைபெறுகிறதோ அதிலிருந்தே இந்த உத்தரவு நடைமுறைக்கு வரவேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×