என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TAMIL LANGUAGE SEMMAL AWARDS"

    • திருச்சி அறிவாளர் பேரவை சார்பில் நல்லாசிரியர் நா.செல்லையனார் 109-வது பிறந்த நாள் விழா மற்றும் தமிழ்ச் செம்மல் விருது வழங்கும் விழா திருச்சி தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.
    • விழாவில் மூத்த தமிழறிஞர் உலக.புவியரசு, கடவூர் மணிமாறன், நல்லாசிரியர் சண்முகநாதன், செயலாபதி, கற்பகம், ஜோதிலட்சுமி ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான ‘தமிழ் மொழிச் செம்மல் ‘விருது வழங்கப்பட்டது.

    திருச்சி:

    திருச்சி அறிவாளர் பேரவை சார்பில் நல்லாசிரியர் நா.செல்லையனார் 109-வது பிறந்த நாள் விழா மற்றும் தமிழ்ச் செம்மல் விருது வழங்கும் விழா திருச்சி தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. விழாவுக்கு டாக்டர் திலகவதி கணேச பாபு தலைமை தாங்கினார். முனைவர் அர.க. விக்கிரமகர்ண பழுவேட்டரையர் வரவேற்றார்.

    இந்த விழாவினை ஆண்டு தோறும் நா.செல்லையனாரின் மகன் அசோகன், அவரது சகோதரி டாக்டர் திலகவதி கணேசபாபு ஆகியோர் கொண்டாடி வருகின்றனர். விழாவில் மூத்த தமிழறிஞர் உலக.புவியரசு, கடவூர் மணிமாறன், நல்லாசிரியர் சண்முகநாதன், செயலாபதி, கற்பகம், ஜோதிலட்சுமி ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான 'தமிழ் மொழிச் செம்மல் 'விருது வழங்கப்பட்டது.

    மதுரைக் காமராசர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கற்பகக்குமரவேல், வணிகவரித்துறை முன்னாள் துணை ஆணையர் முத்தையா சுதாமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர். தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற பேராசிரியர் சுப்பிரமணியன் விருது பெற்றவர்களை வாழ்த்தினார். நிறைவில் முனைவர் செ.அசோகன் நன்றி கூறினார். இதில் மேடை ஒருங்கிணைப்பாளர் இளவரசி கர்ணன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    ×