என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழையால் சேதமான சாலை"

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக இப்பகுதியில் முறையான தூய்மைப்படுத்தப்பட்ட கழிவு நீர் கால்வாய்கள் இல்லாததால் கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து சாலையில் தேங்கி நிற்கிறது.
    • இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடான இடமாக மாறி வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே அமைந்துள்ளது பத்ரகாளி புரம். இப்பகுதியை சுற்றியுள்ள விசுவாசபுரம், மீனாட்சிபுரம், அம்மாபட்டி போன்ற பகுதியிலிருந்து தேனி சந்தைக்கு விவசாய விளைபொருள்கள் கொண்டு செல்லும் முக்கிய போக்குவரத்து பகுதியாகும்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக இப்பகுதியில் முறையான தூய்மைப்படுத்தப்பட்ட கழிவு நீர் கால்வாய்கள் இல்லாததால் கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து சாலையில் தேங்கி நிற்கிறது.

    ஏற்கனவே குண்டும் குழியுமாக பழுதடைந்த நிலையில் உள்ள இந்த சாலையில் மழைக்காலங்களில் நீர் தேங்கி வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள், முதியவர்கள் கடந்து செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    மழை காரணமாக சாலையில் தேங்கி உள்ள நீர் 2 நாட்களுக்கு மேலாகியும் வழியாமல் சாக்கடை கழிவு நீர் கலந்து குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடான இடமாக மாறி வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×