search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coimbatore news கோவைசெய்திகள்"

    2 மாதங்களில் படகு சவாரி பயன்பாட்டுக்கு வரும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறினா்
    கோவை:  

    கோவை மாநகராட்சியில் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புனரமைக்கப்பட்டு, நவீனப்படுத்தப்பட்ட உக்கடம் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், வாலாங்குளத்தின் ஒரு பகுதி மற்றும் புனரமைக்கப்பட்டு வரும் குமாரசாமி, செல்வம்பதிகுளத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை மாநகராட்சி நிா்வாகம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைத்தது.
     
    இதில் உக்கடம் பெரிய குளத்தின் கரையின் மீது நடைப்பயிற்சி பாதை, மிதிவண்டி பாதை, இருக்கைகள், நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் திறந்தவெளி அரங்கம், விளையாட்டுத் திடல், உணவுக் கூடங்கள், படகுத்துறை, மிதவை உணவகம், குளத்துக்கு வரும் கழிவு நீரை சுத்தம் செய்ய கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் ரூ.62.17 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன.

    செல்வசிந்தாமணி குளம் ரூ.31.47 கோடி மதிப்பீட்டிலும், வாலாங்குளம் குறுக்கே உள்ள சாலைப் பகுதி ரூ.24.31 கோடி மதிப்பீட்டிலும் புனரமைக்கப்பட்டுள்ளது.வாலாங்குளத்தின் கரையானது ரூ.67.86 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. 
     
    செல்வம்பதி மற்றும் குமாரசாமி குளங்கள் ரூ.31.25 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ளன. இக்குளங்களில் பல்வேறு வசதிகள் மேற்கொ ள்ளப்பட்டு உள்ளன. இதில் உக்கடம் பெரியகுளத்தில் படகு சவாரி சோதனை ஓட்டத்தில் மட்டுமே மக்கள் பயன்பாட்டுக்கு இருந்தது. நிரந்தரமாக படகு சவாரி மேற்கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.
     
    இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறும்போது, உக்கடம் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தில் கோவை உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்தில் 2 மாதங்களில் படகு சவாரி பயன்பாட்டுக்கு வரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினா்.படகு சவாரி தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 2 மாதங்களில் படகு சவாரி மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றாா். 

    ×