என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 333305
நீங்கள் தேடியது "ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு"
கடம்பூர் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையை பட்டாசு வெடித்து வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர்.
சத்தியமங்கலம்:
கடம்பூர் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையை பட்டாசு வெடித்து வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கடம்பூர் வனப்பகுதியில் யானைகள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டெருமைகள், மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் யானைகள் அடிக்கடி வனப்பகுதி இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதேபோல் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் நடுவில் நின்று வாகன ஓட்டிகளை சில சமயம் அச்சுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் கடம்பூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை மூலக்கடம்பூர், ஏரியூர் பகுதியில் ஊருக்குள் புகுந்தது அங்குள்ள விளை நிலங்களில் நின்று மக்களை அச்சுறுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை வனப்பகுதிக்கு விரட்டுவதற்காக பட்டாசு வெடித்தனர். ஆனாலும் சுமார் 3 மணி நேரமாக வனத்துறையினருக்கு போக்கு காட்டிய ஒற்றை ஆண் யானை அதன்பிறகு வனப்பகுதிக்குள் சென்றது.
இதன் பிறகு ஊர் பொதுமக்கள், வனத்துறை யினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
×

X