என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kaali amman"

    கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டியில் கிராமத்தில் அமைந்துள்ள அக்னி காளியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இதனையொட்டி அக்னி காளியம்மனுக்கு மஞ்சள், பால், தயிர் முதலான 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து 51 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர். பூஜைகளை கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரேஸ்வரிகோவில் அர்ச்சகர் சுப்பிரமணியன் செய்தார்.  

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.
    ×