search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டாத்துறையில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழக முதல்வரால் "கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்" சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டாத்துறை ஊராட்சியில் பயனாளிகளுக்கு விவசாய இடு பொருட்கள் வழங்கப்பட்டது.
    கன்னியாகுமரி:

    தமிழக முதல்வர் "கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்" தொடக்க விழாவை காணொலிக காட்சி மூலம் சென்னையில் தொடங்கி வைத்தார். 

    அதன் ஒரு பகுதியாக திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டாத்துறை ஊராட்சியில் பயனாளி களுக்கு விவசாய இடு பொருட்களை திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் காட்டத்துறை ஊராட்சி மன்ற தலைவர் இசையாஸ், திருவட்டார் உதவி வட்டார அலுவலர் ஷீலா, திருவட்டார் வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரபோஸ், தோட்டக்கலை உதவி இயக்குநர் திலீப், வேளாண் பொறியியல் கண்காணிப்பாளர் வள்ளிநாயகி, 

    பூவன்கோடு கால்நடை மருத்துவர் ஷையது றசல் திருவட்டார் வேளாண்மை அலுவலர் அட்லின், காட்டாத்துறை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் நாகேஸ்வரன் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
    ×