என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லீபுரம் பஞ்சாயத்தில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்"

    அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை ஆலோசனைக்குழுத் தலைவர் தாமரைபாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இடுபொருள், விசைநீர் தெளிப்பான், காய்கனி விதைகள், மரக்கன்றுகளை வழங்கினார்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள லீபுரம் பஞ்சாயத்தில் கலைஞர் அனைத்து ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    தமிழகம் முழுவதும் இந்தத்திட்டம் முதல் கட்டமாக 1997 கிராம பஞ்சாயத்துகளில் தொடங்கப்பட்டது. லீபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆமணக்கன்விளையில் நடந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கப்பட்டன.

    லீபுரம்பஞ்சாயத்து தலைவி ஜெயகுமாரி லீன் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை ஆலோசனைக்குழுத் தலைவர் தாமரைபாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இடுபொருள், விசைநீர் தெளிப்பான், காய்கனி விதைகள், மரக்கன்றுகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மை அலுவலர் சுகன்யா, தோட்டக்கலைத் துறை வட்டார உதவி இயக்குநர் ஆறுமுகம். உதவி அலுவலர் தர்மராஜ், கால்நடை உதவி மருத்துவர் வெங்கடேஷ், உதவி அலுவலர் முகமது ஷம்ரி, லீபுரம் பஞ்சாயத்து துணைத் தலைவர் மணி கண்டன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் சுயம்புகனி மரியா ஜெராபின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×