search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tomato low"

    மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி விலை குறைந்து கிலோ ஒன்றுக்கு ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    மதுரை

    மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக பெய்த மழை மற்றும் கடுமை யான வெயில் காரண மாக தக்காளி விளைச்சல் பெருமளவு பாதிக்கப்ப ட்டது. இதனால் மார்க்கெட்டு களில் தக்காளியின் வரத்து கணிசமான அளவுக்கு குறைந்தது காரணமாக மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.

    ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயை தாண்டிய நிலையில் மதுரையில் உழவர் சந்தைகளில் மட்டும் 85 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் தக்காளியின் வரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டு ள்ளதால் அதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ங்களில் தக்காளி யின் விளைச்சல் அதிகரித்ததன் காரணமாக தினமும் அதிக அளவில் தக்காளி பெட்டிகள் மதுரை மார்க்கெட்டுக்கு வந்த வண்ணம் உள்ளன. வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளியின் விலை கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது. 

    5 நாட்களுக்கு முன்பு தக்காளி வெளி மார்க்கெட்டு களில் 110 ரூபாய்க்கும், உழவர் சந்தை களில் 85 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுவந்தன. ஆனால் இன்று தக்காளி கிலோவுக்கு 20 ரூபாய் குறைந்து வெளி மார்க்கெட்டுகளில் தக்காளி 90 ரூபாய்க்கும் உழவர் சந்தைகளில் 65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதனால் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

    பொதுமக்களும் மற்ற காய்கறி களான கத்தரி 32 ரூபாய்க்கும், உருளைக் கிழங்கு 42 ரூபாய், வெண்டைக்காய் 36 ரூபாய், புடலங்காய் 24 ரூபாய், 50 ரூபாய் மிளகாய் 16 ரூபாய், கேரட் 40 ரூபாய், 50 ரூபாய் இருபது ரூபாய்க்கு விற்ற சின்ன வெங்காயம் 28 ரூபாய் கொடுக்கப்பட்டது. மேலும் கேரட் 40 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. முருங்கைக்காய் கிலோ 50 ரூபாய்க்கும், அவரை 90 ரூபாய்க்கும், பட்டர்பீன்ஸ் 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.
    ×