என் மலர்
நீங்கள் தேடியது "வள்ளி திருமண சரித்திர நாடகம்"
மெலட்டூர் பாகவத மேளாவில் வள்ளி திருமண சரித்திர நாடகம் நடைபெற்றது.
அம்மாப்பேட்டை:
தஞ்சை மாவட்டம் மெலட்டூரில் பாகவத மேளா என்கிற தெய்வீக நாட்டிய நாடகக் கலைவிழா ஸ்ரீலெட்சுமி நரசிம்மர் கோவில் வளாகத்தில் கடந்த 19-ந்தேதி லட்சார்ச்சனையுடன் தொடங்கி 7 நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவில் பிரகலதா சரித்திரம், ஹரிச்சந்திரா ஆகிய நாடகங்களும், மோகினி ஆட்டம், குச்சுபுடி உள்பட பல்வேறு பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றன.
நாடக விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியாக வள்ளி திருமணம் தமிழ் நாடகமும் நடைபெற்றது. நாடகத்தை உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் பலரும் கண்டு ரசித்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ லெட்சுமி நரசிம்ம ஜெயந்தி பாகவதமேளா நாட்டிய நாடக சங்க இயக்குநர் குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.






