search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேபாள விமானம்"

    விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டது. அதனையும் மீட்பு படையினர் கண்டுபிடித்தனர்.

    காத்மாண்டு:

    நேபாளத்தின் சுற்றுலா நகரான பொக்காரவில் இருந்து ஜோம்சாம் நகருக்கு நேற்று முன்தினம் சென்ற விமானம், இமயமலை பகுதியில் விழுந்து நொறுங்கியது.

    இந்த விமானத்தில் ஊழியர்கள் உள்பட 22 பேர் இருந்தனர். அவர்கள் அனைவருமே பலியாகி விட்டனர். நேற்று காலையில் விமானம் விழுந்த பகுதியை நேபாள மீட்பு படையினர் கண்டுபிடித்தனர்.

    நேற்றே 21 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. ஒருவரது உடல் மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இன்று காலையில் அவரது உடலும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.

    இதற்கிடையே விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டது. அதனையும் மீட்பு படையினர் கண்டுபிடித்தனர். இனி அதனை ஆய்வு செய்த பின்னரே விபத்துக்கான முழுமையான காரணங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விமானத்தில் பயணம் செய்த 4 இந்தியர்கள் யார் என்பதை விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது.
    காத்மாண்டு:

    நேபாளத்தில் உள்ள ஒரு தனியார் விமான நிறுவனத்தால் இயக்கப்படும் தாரா ஏர் விமானம் நேற்று காலை 9.55 மணிக்கு 4 இந்தியர் உள்பட 22 பேருடன் சுற்றுலா நகரமான போகாராவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் மாயமானது.

    விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் ரேடார் பார்வையில் இருந்து மறைந்தது. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் விமானம் இமயமலையின் பனிபடர்ந்த பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 22 பேரும் பலியாகி இருக்கலாம் என கூறப்பட்டது.

    நேபாளத்தில் விபத்தில் சிக்கிய விமானம் விழுந்த சனோஸ்வர், தசாங் 2, முஸ்டாங் பகுதியில் மீட்புப் படையினர் விமான பாகங்களை கண்டுபிடித்தனர்.

    அந்த விமானத்தில் பயணம் செய்த 4 இந்தியர்கள் யார் என்பதை விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது. வைபவி பெந்த்ரே (51), அவரது முன்னாள் கணவர் அசோக் குமார் திரிபாதி (54), அவர்களது மகன் தனுஷ் (22), மகள் ரித்திகா (15) என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் உயிரிழந்தனர். இவர்கள் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கி உள்ளனர்.

    இந்நிலையில், விபத்துக்கு உள்ளான விமானத்தில் மேற்கண்ட 4 இந்தியர்கள், 2 ஜெர்மனியர்கள், 13 நேபாள பயணிகள் மற்றும் 3 விமான ஊழியர்களும் பயணித்தனர். இதுவரை 21 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய ஒருவரின் உடலை மீட்கும் பணியில் மீட்புக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 
    விமானம் விழுந்த பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.
    காத்மாண்டு:

    நேபாள நாட்டின் தாரா ஏர் நிறுவனத்தின் சார்பில் சுற்றுலா விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த விமானம் சுற்றுலா நகரான பொக்காராவில் இருந்து ஜோம்சாம் நகருக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும். நேற்று காலை 10.15 மணிக்கு இதுபோல சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ஜோம்சாம் நகருக்கு புறப்பட்டது.

    விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மானியர்கள், 13 நேபாளிகள், 3 நேபாள சிப்பந்திகள் என 22 பேர் இருந்தனர்.

    விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையின் ரேடார் பார்வையில் இருந்து மறைந்தது. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் விமானம் இமயமலையின் பனிபடர்ந்த பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 22 பேரும் பலியாகி இருக்கலாம் என கூறப்பட்டது.

    விமானம் எந்த இடத்தில் விழுந்தது, எப்படி விபத்து ஏற்பட்டது என்பது பற்றி நேபாள ராணுவத்தினர் விசாரணை நடத்தினர். இதற்காக ராணுவ வீரர்கள், மீட்பு குழுவினர் விமானம் விழுந்த பகுதியை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் விமானம் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக இன்று நேபாள ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் நாராயண் சில்வால் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:-

    நேபாளத்தில் விபத்தில் சிக்கிய விமானம் விழுந்த இடம் தெரியவந்துள்ளது. சனோஸ்வர், தசாங் 2, முஸ்டாங் பகுதியில் எங்கள் மீட்பு படையினர் விமான பாகங்களை கண்டுபிடித்துள்ளனர் என்று குறிப்பிட்டு உள்ளார்.

    விமானம் விழுந்த பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதால் அங்கு விமானத்தின் கருப்பு பெட்டியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    இதுபோல விபத்தில் பலியானவர்களின் உடல்களை தேடும் பணியும் நடந்து வருகிறது. விபத்து நடந்த பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. என்றாலும் பலியானவர்களின் உடல்களை தேடும் பணி தொடங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே விமானத்தில் பயணம் செய்தவர்கள் யார்-யார்? என்ற பட்டியலை விமான நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

    இதில் விமானத்தில் பயணம் செய்த 4 இந்தியர்களும் மகாராஷ்டிர மாநிலம் பூனாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அசோக் குமார் திரிபாதி, அவரது மனைவி வைபவி பண்டேகர், குழந்தைகள் தனுஷ் மற்றும் ரித்திகா என தெரியவந்துள்ளது. இவர்கள் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கி உள்ளனர்.



    நேபாளத்தில் 22 நபர்களுடன் சென்ற தாரா ஏர் 9 என்ஏஇடி விமானத்தின் தகவல் தொடர்பு இன்று காலை துண்டிக்கப்பட்டு மாயமானது.
    காத்மாண்டு:

    நேபாளத்தில் இருந்து காலை 9.55 மணிக்கு பொக்காராவில் இருந்து ஜோம்சோமுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் மாயமானது. அந்த
    விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் உள்பட மொத்தம் 22 பேர் பயணம் செய்துள்ளனர். காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், மாயமான விமானம் நேபாளத்தின் மஸ்டாங் அருகே கோவாங் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    விமானத்தின் முழுமையான நிலை குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என திரிபுவன் சர்வதேச விமான நிலைய தலைவர் தெரிவித்துள்ளார்.
    ×