search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Set-top boxes"

    அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை மற் றும் அரசிடம் இருந்து பெற்ற செட்டாப் பாக்ஸ்களை ஒப்படைக்க வேண்டும்.தவறும்பட்சத்தில் உள்ளூர் ஆபரேட்டர்கள் மீது குற்ற வியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தினரால் பொது மக்களுக்கு இலவசமாக செட்டாப் பாக்ஸ் குறைந்த தொகையில் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட் டர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 

    சந்தாதாரர்களின் விருப்பம் இல்லாமல் அரசு செட்டாப் பாக்சை மாற்றி னாலோ அல்லது அரசு சிக்னல் இனி வராது என்று தவறான தகவலை ஆபரேட்டர்கள் கூறி மாற்றினால் உடனடியாக 0421 2971142 என்ற திருப்பூர் அரசு கேபிள் டி.வி. அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்கலாம்.

    செட்டாப் பாக்ஸ் பழுதடைந்தாலோ, மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் துண்டித்திருந்தாலோ, வேறு இடத்துக்கு குடிபெயர்ந்தாலோ, தனிநபர் செட்டாப் பாக்ஸ் பயன்படுத்தினாலோ செட்டாப் பாக்ஸ், ஏ.வி. கார்டு, ரிமோட், பவர் அடாப்டர் ஆகியவற்றை உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டரிடம் ஒப்படைக்க வேண்டும். 

    அவற்றை அரசு கேபிள் டி.வி. அலுவலகத்தில் ஒப்ப டைக்க வேண்டும். உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வேறு நிறுவ னத்துக்கு செல்லும்போது, அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை மற்றும் அரசிடம் இருந்து பெற்ற செட்டாப் பாக்ஸ்களை ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்யாத ஆபரேட்டர்கள் மீது சட்டப்பூர்வமான நடவ டிக்கை எடுக்கப்படும்.

     செயல்படாத செட்டாப் பாக்ஸ் கள், அனலாக் தொகை செலுத்தாமல் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் இருக்கிறார்கள். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை இறுதி வாய்ப் பாக கொண்டு வருகிற 20-ந் தேதிக்குள் செயல்படாத செட்டாப் பாக்ஸ்களை ஒப்படைக்க வேண்டும். அனலாக் தொகையை செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் உள்ளூர் ஆபரேட்டர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    ×