என் மலர்
நீங்கள் தேடியது "காளியம்மன் ேகாவில்"
சோழவந்தான் அருகே உள்ள காளியம்மன் ேகாவில் கும்பாபிஷேகம் நடந்தது.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே தென்கரைபுதூர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு
2 நாட்கள் பிரசாந்த்சர்மா தலைமையில் யாகபூஜை நடைபெற்றது.
இன்று காலை மேளதாளத்துடன் புனித நீர்க் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்து கோவில் கோபுரத்தின் கும்ப கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
இதைத்தொடர்ந்து காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
இவ்விழாவில் டாக்டர் மகேந்திரன்,ராஜேந்திரன் ,ஊராட்சி மன்ற தலைவர்மஞ்சுளாஅய்யப்பன்,துணைத்தலைவர் கிருஷ்ணன் ,ஊராட்சி
செயலாளர்கள்முனிராஜ்,திருச்செந்தில், செல்வம் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






