என் மலர்
நீங்கள் தேடியது "மக்காத குப்பை மறுசுழற்சி செயல்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு"
ஆப்பக்கூடல் பேரூராட்சி பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை மறுசுழற்சி செயல்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
ஆப்பக்கூடல்:
ஆப்பக்கூடல் பேரூராட்சி பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை மறுசுழற்சி செயல்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
ஆப்பக்கூடல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் “என் குப்பை என் பொறுப்பு” என்ற செயல்பாடுகளின் அடிப்படையில் அனைத்து வார்டுகளிலும் சேகரி க்கப்படும் குப்பைகளை எவ்வாறு தரம் பிரித்து வழங்க வேண்டும் என்பது குறித்தும், மக்கும் குப்பை, மக்காத குப்பை மறுசுழற்சி செயல்பாடு குறித்தும் பொது மக்களிடையே பேரணி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆப்பக்கூடல் பேரூராட்சி தலைவர் செல்வி தலைமையில் துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களால் காமராஜர் வீதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அதனை தொடர்ந்து ஆப்பக்கூடல் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு செயல் அலுவலர் ஹேமலதா முன்னிலையில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.






