என் மலர்
நீங்கள் தேடியது "மண் எடுக்க பணம் லஞ்சம் பெற்ற தாசில்தார்"
கரிமங்கலத்தில் மண் அள்ள லஞ்சம்வாங்கிய அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார்.
காரிமங்கலம்,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா அலுவலகத்தில் கடந்த மாதத்தில் தாசில்தாராக வினோதா என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அதற்கு முன் நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் இரண்டு மாதங்கள் மட்டுமே பணி புரிந்த நிலையில் பல்வேறு புகார்களை அடுத்து காரிமங்கலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
காரிமங்கலம் பகுதியில் ஏரியில் மண் எடுக்க யாருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை. ஆனால் பல்வேறு இடங்களில் மண் திருட்டு அதிகாரிகள் ஆசியுடன் நடந்துவந்தது. இந்நிலையில் மண் எடுப்பதற்காக சம்பந்தப்பட்ட பெண் தாசில்தார் ரூ 40 ஆயிரம் வரை பணம் பெற்றுக் கொண்டு மேலிட புகார் என கூறி மண் பறிமுதல் மற்றும் வழக்கு பதிவு செய்வதாக பெரியாம்பட்டியைச் சேர்ந்த பெரிச்சி என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார்.
புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட பெண் தாசில்தார் வினோதா நேற்று மாலை அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு முத்திரைத்தாள் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் அவரிடம் 17-பி பிரிவின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது காரிமங்கலம் தாசில்தாராக பென்னா கரத்தில் பணி புரியும் சுகுமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.






