என் மலர்
நீங்கள் தேடியது "பெரம்பலூரில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக வாயிற்கூட்டம்"
- பெரம்பலூரில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக வாயிற்கூட்டம் நடை பெற்றது.
- பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், விரைந்து அகவிலை ப்படியை அறிவிக்கவிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டது.
பெரம்பலூர்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் பிளஸ்1 விடைத்தாள் திருத்தும் மையமான பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் வாயிற் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனிவேலன் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், முன்னாள் மாநில செய்தி தொடர்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணை பொது செயலாளர் பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றுகையில், சங்கத்தின் வரலாறு, சங்கம் கடந்து வந்த பாதை முதுகலை ஆசிரியர்களுக்கு இப்பணித் தொகுதி யிலுள்ள இடர்பாடு போன்றவற்றை பற்றியும் விளக்கமாக எடுத்துகூறியதோடு,
மாநில அரசு தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், விரைந்து அகவிலை ப்படியை அறிவிக்கவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினார்.
இதில் மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். முடிவில் மாவட்ட அமைப்பு செயலாளர் மணி நன்றி கூறினார்.






