என் மலர்
நீங்கள் தேடியது "தடைசெய்யப்பட்ட தைலம்"
- கொடைக்கானலில் சாக்லேட் மற்றும் ஸ்பைசஸ் விற்பனை செய்யும் சிறிய மற்றும் பெரிய கடைகள் உள்ளன.
- தடைசெய்யப்பட்ட தைலம் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
கொடைக்கானல் :
கொடைக்கானலில் ஏரிச்சாலைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக சாக்லேட் மற்றும் ஸ்பைசஸ் விற்பனை செய்யும் சிறிய மற்றும் பெரிய கடைகள் அமைந்துள்ளது.
இந்த கடைகளில் கொடைக்கானலில் தயாரிக்கப்படும் ஹோம்மேடுசாக்லேட், மற்றும் தைலங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில கடைகளில் தடைசெய்ய–ப்பட்ட தைலம் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இந்த தைலத்தை கொடைக்கானலில் சில இளைஞர்கள் குடித்து தற்கொலை செய்தும் வருகின்றனர். இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கொடைக்கானல் நகர்ப்பகுதிகளில் உள்ள பல்வேறு சாக்லேட் கடைகளில் உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரி லாரன்ஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் உயிர்க்கொல்லி தைலம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.






