என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்"

    • கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
    • இன்றும் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

    திண்டுக்கல் :

    தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் திண்டுக்கல் எம்.எஸ்.பி பள்ளி முன்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து வாயிற்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் ஜெயசீலன் பிரபாகரன் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய மண்டல மகளிரணி செயலாளர் பாரதி, பொருளாளர்கள் தமிழ்ச்செல்வன், அன்பழகன், மாவட்ட செயலர் தமிழ்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆசிரியர்களுக்கு பணிபாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும். சி.பி.எஸ் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை ரத்து செய்யவேண்டும்.

    அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதுபோல் அனைத்து அரசு நலத்திட்டங்களும், சலுகைகளும் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ×