என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயிகளுக்கு முன்னரிமை அடிப்படையில் இலவச மின் இணைப்பு"
- விவசாயிகளுக்கு முன்னரிமை அடிப்படையில் இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- மேற்பார்வை பொறியாளர் உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மின்வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திர விஜய் முன்னிலை வகித்தார். மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமை வகித்தார்.
இதில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக விவசாய பம்ப் செட் ஓடவில்லை, இதனால் விவசாயநிலத்திற்கு தண்ணீர் விட முடியவில்லை, ஆகையால் புதிதாக அதிக மின் அழுத்தம் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைத்து மின் விநியோகம் வழங்கவேண்டும்,
மக்கள் நலன் கருதி மின் அலுவலகம் அமைக்கவேண்டும், மின்தடை சரி செய்யவேண்டும், முறையாக மின் விநியோகம் செய்யவேண்டும், காலதாமமின்றி மின் இணைப்பு வழங்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மின்நுகர்வோர்கள் மனு அளித்தனர். அம்மனுவினை சம்மந்தபட்ட மின் அலுவலர்களிடம் அளித்து போர்க்கால அடிப்படையில் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என மேற்பார்வை பொறியாளர் அம்பிகா உத்தரவிட்டார்.
பின்னர் மேற்பார்வை பொறியாளர் அம்பிகா பேசுகையில், மின்நுகர்வோர்களின் புகார்கள் மீது கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் குறைகளை தீர்வு செய்யவேண்டும், மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள பொதுமக்களுக்கு மின் இணைப்பு வழங்க துரிதமாக செயல்படவேண்டும்,
பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பினை முன்னுரிமை அடிப்படையில் காலதாமதமின்றி வழங்கவேண்டும். இயற்கை சீற்றங்கள், பேரிடரால் ஏற்படும் மின் தடை, மின் கம்பம் விழுதல், பழுது ஏற்படுதல் போன்ற குறைபாடுகளை அவசரநிலையில் களையவேண்டும் என மின் உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தினார்.






