என் மலர்
நீங்கள் தேடியது "ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தூய்மை பணி"
- ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
- அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் இருந்த குப்பைகளை அப்புறப்படுத்தியும் போலீஸ் நிலையத்தில் ஒட்டடை அடித்து தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
அரியலூர்:
மாதம் ஒருமுறை இரண்டாவது சனிக்கிழமை போலீஸ் நிலையங்கள் மற்றும் போலீசார் குடியிருப்பு இடங்களைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தை தூய்மை காக்கும் வண்ணம் தூய்மை பணி செய்ய தமிழக காவல் துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தலின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் ஆலோசனையின் பேரில்
அனைத்துமகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் இரண்டாவது சனிக்கிழமை தூய்மை பணி மேற்கொண்டார்.
அப்போது அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் இருந்த குப்பைகளை அப்புறப்படுத்தியும் போலீஸ் நிலையத்தில் ஒட்டடை அடித்து தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது






