என் மலர்
நீங்கள் தேடியது "34 செல்போன்கள்"
ரூ. 9 லட்சம் மதிப்புள்ள 34 செல்போன்களை அபேஸ் செய்த கூரியர் ஊழியாரை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம்:
ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் சேலம் சூரமங்கலத்தில் உள்ள கூரியர் நிறுவனம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அந்த நிறுவனத்தில் சேலம் மாமாங்கத்ைத சேர்ந்த வெங்கடேசன் (வயது 24) என்பவர் பணிபுரிந்தார். அவர், வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டிய செல்போன்களை அபேஸ் செய்து வந்துள்ளார். இது குறித்து கூரியர் நிறுவனத்தில் புகார்கள் வந்தன. இதையடுத்து அந்த கூரியர் நிறுவன மேலாளரான மல்லூரை சேர்ந்த திருநாவுக்கரசு (46) நேற்று சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், ஊழியர் வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ரூ.9 லட்சம் மதிப்பில் 34 செல்போன்களை அபேஸ் செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.






